கும்பகோணம் அருகே எலுமிச்சங்காய் பாளையத்தில் இடிந்து விழுந்த வீடு. 
தமிழ்நாடு

தஞ்சாவூர்: தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் சேதம், 3 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைகின்றன.

கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையம் சிவஜோதி நகரில் ஓட்டு வீடு வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த குப்புசாமி (70), இவரது மனைவி யசோதா (65) பலத்தக் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

குப்புசாமி -  யசோதா

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல தஞ்சாவூர் அருகே வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி மனைவி சாரதாம்பாள் (83).  இவர் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சாரதாம்பாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT