முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் நிகழ்ச்சிக்கு விதிமுறை மீறி பேனர்: டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் முறையீடு

விதிமுறைகளை மீறி  முதல்வர் நிகழ்ச்சிக்காக கட்டவுட் போஸ்டர் வைக்கபட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
மதுரைக்கிளை நீதிமன்றம்
பகிர்:

விதிமுறைகளை மீறி  முதல்வர் நிகழ்ச்சிக்காக கட்டவுட் போஸ்டர் வைக்கபட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.

மதுரையில் கூட்டு  குடிநீர் திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்துள்ளார். விழாவில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதற்காக நகரின் முக்கிய பகுதிகளில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கட் அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செயலாகும்.

எனவே இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்தார்.

நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விரிவாக மனுவை தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →