கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் 
தமிழ்நாடு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம்

கொங்கு நாட்டின் சிவதலங்களில் முதன்மை பெற்றதும், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றதும் கருவூர் சித்தர் அடங்கிய புன்னிய ஸ்தலமான கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

DIN



கரூர்:  கொங்கு நாட்டின் சிவதலங்களில் முதன்மை பெற்றதும், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றதும் கருவூர் சித்தர் அடங்கிய புன்னிய ஸ்தலமான கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

வெள்ளிக்கிழமை அதிகாலை 5-ஆம் கால யாக பூஜை நடைபெற்று பின்னர் கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரத்தின் உச்சிக்கு எடுத்துச் சென்று கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கரோனா தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கோவில் கும்பாபிஷேகம் நீதிமன்ற அறிவுறுத்தவின்படி தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?

ராகுல் காந்தியின் மனு: செப்.3ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை!

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

விதிமீறல் கட்டடம்: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட மாநகராட்சி ஆணையர்!

தமிழ்நாட்டில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்

SCROLL FOR NEXT