முகப்பு
தமிழ்நாடு

கூட்டணி குறித்து 3 நாள்களில் முடிவு! - ராமதாஸ்

கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி....

Updated On : 3 மார்ச், 2026 at 1:22 PM
Dr Ramadoss - IANS
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 12:27 PM

கூட்டணி குறித்து 3 நாள்களுக்குள் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 3 மார்ச், 2026 at 1:10 PM

பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில் பாமகவின் ராமதாஸ் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.

Advertisement

அதிமுக - பாஜக கூட்டணியில் அவரது மகன் அன்புமணி இணைந்துள்ளதால், திமுக அல்லது தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும் என்று ராமதாஸ் ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார்.

Updated On : 3 மார்ச், 2026 at 1:21 PM

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

கூட்டணி தொடர்பாக பாமகவின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ்,

"கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அதுகுறித்து அறிவிப்போம். இன்னும் 3 நாள்கள் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் என்பதால் அந்த 3 நாள்களில் நாங்கள் கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்போம்" என்றார்.

summary

Decision on alliance in 3 days: Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.