தமிழ்நாடு

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை: தமிழருவி மணியன்

DIN

முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளதாக ரஜினி கட்சி மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 

ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா, கட்சி தொடங்குவாரா இல்லையா என்பதற்கு முடிவு கிடைத்துள்ளது. வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் நேற்று அறிவித்துள்ளார். 

மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார். 

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், 

'முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். ஆனால், மக்கள் அவர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதுவரை ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளரா இல்லையா என்பது குறித்து நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை. 

ரஜினியிடமிருந்து என்னைப் பிரிக்க சதி நடக்கிறது. 

ரஜினியால் மட்டுமே வெளிப்படையான ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க முடியும். அவர் வாக்கு தவறாத மனிதர். சொன்னதைச் செய்திருக்கிறார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2017ல் கூறினார். அதுபடி செய்து காட்டியிருக்கிறார். மற்றபடி கட்சி தொடங்க அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT