தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்களாக மீண்டும் கொட்டித் தீர்க்கும் மழை

DIN


விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை வரை பரவலாக மழை பெய்து வந்தது

தொடர்ச்சியாக மீண்டும் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை வரை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, திண்டிவனம், விழுப்புரம், கண்டமங்கலம், வளவனூர் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. 

வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை:

திண்டிவனத்தில் 143 மிமீ, வளவனூரில் 109 மிமீ, முண்டியம்பாக்கம் 90, விழுப்புரத்தில் 92, செஞ்சியில் 85, வள்ளத்தில் 92, மரக்காணத்தில் 88, வானரில் 82, கஞ்சனூர் 82, செஞ்சி 85, முகையூர் 89, திருவெண்ணநல்லூர் 33, என மொத்தம் மாவட்டம் முழுவதும் சராசரியாக 78.5 மில்லிமீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விழுப்புரம் பேருந்து நிலையம், இந்திரா நகர், ரயில்வே பாலம் மற்றும் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT