சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை கரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நாளை (டிச.06) நடைபெறுகிறது.
தமிழ்நாடுசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை கரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நாளை (டிச.06) நடைபெறுகிறது.
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நாளை (டிச.06) நடைபெறுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பொதுமக்களும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதைப் பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கரோன வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிமிர்வு கலையகம் அமைப்புடன் இணைந்து நாளை மாலை 6.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பறையாட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.