விழுப்புரத்தில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்
விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி அறவழி ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளராக ஜனகராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அன்னியூர் சிவா, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் லட்சுமணன், மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.
ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்புச் சட்டையுடன் கொட்டும் மழையிலும் பங்கேற்று, கைகளில் கருப்புக் கொடிகள் ஏந்தி, மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.