பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகே, மற்ற ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. அரியர்ஸ் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், வரும் 7-ஆம் தேதி முதல் இறுதியாண்டு இளங்கலை, மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கான, வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் தமிழக அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டது.
இதனிடையே பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகே, இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.