நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பேசும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசுவாமி. 
தமிழ்நாடு

டிச.27 முதல் லாரிகள் வேலை நிறுத்தம்: தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் டிச.27 முதல் லாரிகள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

DIN

வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் வில்லை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் டிச.27 முதல் லாரிகள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

நாமக்கல்லில் அச்சமே மனத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அதன் தலைவர் எம்.ஆர். குமாரசுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

வேகக் கட்டுப்பாட்டு கருவியை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் மதுரை உயர் நீதிமன்றம் எந்த நிறுவனத்திலும் கட்டுப்பாட்டுக் கருவியை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அவனை லாரி உரிமையாளர்கள் பின்பற்ற அரசு அனுமதிக்க வேண்டும். 

இதேபோல் வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் வில்லையையும் (ஸ்டிக்கர்) குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கட்டாயப்படுத்துவது வேதனை அளிக்கிறது. தமிழக முதல்வரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜிபிஆர்எஸ் கருவி ஏற்கனவே லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் வாங்கி பொருத்துமாறு வலியுறுத்துகின்றனர்.

மற்ற மாநிலங்களில் இதுபோன்ற நிலை இல்லை. அதேபோல் காலாண்டு வரியைச் செலுத்துமாறும் கட்டாயப்படுத்துகின்றனர். வேகக்கட்டுப்பாட்டுக் கருவி கட்டாயம் பொருத்துவது உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம். இன்றிலிருந்து 21 நாள் கெடு உள்ளது. அதற்குள் மாநில அரசு எங்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT