முகப்பு
தமிழ்நாடு

வலிவலத்தில் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிப்பு: எம்.எல்.ஏ. மதிவாணன் பங்கேற்பு

திருக்குவளை அருகே உள்ள கொடியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வலிவலம்  பகுதியில் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
வலிவலத்தில் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிப்பு
பகிர்:

டாக்டர் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக திருக்குவளை அருகே உள்ள கொடியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வலிவலம் கடைத்தெரு பகுதியிலுள்ள அவருடைய திருவுருவப் படத்திற்கு டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கொடியாலத்தூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தை. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசுப் பள்ளி ஆசிரியரும் இவ்வமைப்பின் உறுப்பினருமான ஜய்யப்பன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் திமுக கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் பால்வளத் துறை அமைச்சருமான உ. மதிவாணன் பங்கேற்று அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நிகழ்வில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த ஜி. சதீஷ்குமார், எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →