முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
சாத்தான்குளத்தில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
பகிர்:

சாத்தான்குளம்: சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத்தலைவர் சங்கர், ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் பிச்சி விளை சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் சரவணன், நகர மகிளா காங்கிரஸ் தலைவி புளோரா ராணி, நகர  வார்டு கமிட்டித் தலைவர் முத்தழகன், நகர கமிட்டி துணைத் தலைவர் யேசுராஜா, நகர வர்த்தகப் பிரிவு காங்கிரஸ் தலைவர் கதிர்வேல், வட்டார காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →