பாரத் பந்த்: தமிழக விவசாய, வணிக அமைப்புகளுக்கு திமுக, கூட்டணி கட்சிகள் அழைப்பு
டிச. 8 ஆம் தேதி நடைபெறும் 'பாரத் பந்த்' தில் கலந்துகொள்ள தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்களுக்கு திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக டிச. 8 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய ‘பாரத் பந்த்'துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்களுக்கு திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிச. 8 ஆம் தேதி, இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நாடு தழுவிய ‘பாரத் பந்த்' முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதில், தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், சமூகநல அமைப்புகள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
'விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல் அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்கும் குரலாக இருக்கட்டும்
னைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, 'பாரத் பந்த்'தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்' என்று அனைத்துக்கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் தொடர்ந்து 11 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.