அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு
பொன்னேரி வட்டத்தில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மத்தியக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொன்னேரி: பொன்னேரி வட்டத்தில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மத்தியக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் நிவர் புயல் காரணமாக மழை நீர் தேங்கிய மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட எண்ணூர் முகத்துவாரம், அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில், மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு இயக்குனர், ஹர்ஷா தலைமையில்,
அமித் குமார், ஓ.பி.சுமன், தர்மவீர் ஜா உள்ளிட்ட உள்ளிட்ட மத்தியக் குழுவினர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மாநில பொதுப்பணித்துறை, முதன்மைச் செயலர், மணிவாசன், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் வெள்ள பாதிப்பு விபரங்கள் குறித்து மத்தியக் குழுவினரிடம் எடுத்துக் கூறினர்.
மாநில முதன்மைப் பொறியாளர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சென்னை மண்டலம் அசோகன், பாலாறு வடிநில கோட்டம் கண்காணிப்பு பொறியாளர் முத்தைய்யா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.