பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்
பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலியானார். மேலும் பெண் உள்பட இருவர் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலியானார். மேலும் பெண் உள்பட இருவர் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் யாசின் முகமது (40) இவர் அப்பகுதியில் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீடு கட்டும் பணிக்காக தற்காலிக மின்இணைப்பு பெற்று, மின்இணைப்பு எர்த் கம்பியை மரத்தில் கட்டியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த முருகலெட்சுமி துணிகளை கம்பியில் காயப் போட்டுள்ளார்.
அப்பெண்ணின் மீது மின்சாரம் தாக்கியதில் சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்த யாசின் அகமது மற்றும் வேல்முருகன் ஆகியோர் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி யாசின் முகமது இறந்து விட்டார். மேலும் முருகலெட்சுமி மற்றும் வேல்முருகன் ஆகியோர் பெரியகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.