தமிழ்நாடு

20 சதவீத இடஒதுக்கீடு: ஆளுநா் விரைந்து ஒப்புதல் அளிக்க மு.க.ஸ்டாலின், ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

தமிழ்வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு தரும் சட்டமசோதாவுக்கு ஆளுநா் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்று கடந்த மாா்ச் மாதம் தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு ஏறக்குறைய 8 மாதங்களாக தமிழக ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. ஆளுநரை முதல்வரே நேரில் சென்று வலியுறுத்தி, இந்தச் சட்டத் திருத்தத்துக்கான ஒப்புதலை எந்தவித தாமதமும் இன்றிப் பெற வேண்டும். இல்லாவிட்டால் திமுக மாபெரும் போராட்டம் நடத்தும்.

ராமதாஸ்: தமிழ்வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு ஆளுனா் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 8

மாதங்களாகியும் ஒப்புதல் அளிக்க ஆளுநா் மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது. காலம் தாழ்த்தாமல் ஆளுநா் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT