தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டங்களுக்கான தமிழக அரசின் தடை தொடரும்: உயர்நீதிமன்றம்

DIN

ஆன்லைன் சூதாட்டங்களுக்கான தமிழக அரசின் தடை தொடரும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க  உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆன் லைன் விளையாட்டால் பணத்தை இழந்த விரக்தியில் தமிழகத்தை சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து, ஆன் லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த நவம்பர் 21- ஆம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜங்லி கேம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல திறமையை வளர்க்கும் விளையாட்டு என  உச்ச நீதிமன்றம் கடந்த 1968-ஆம் ஆண்டே தீர்ப்பு வழங்கியுள்ளது. தங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன் லைன் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தியும் செலுத்தாமலும் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை விதிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு, கேரளம் மற்றும் ஆந்திரத்தில் மட்டுமே தடை விதிக்கப்பட்டிருப்பது தவறானது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், ரம்மி விளையாட்டு சூதாட்டமாக கருத முடியாது எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு தொடர்பாக டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT