தமிழ்நாடு

வெள்ளப் பணிகள்: அமைச்சா்கள் குழுவில் சி.வி.சண்முகம்; முதல்வா்

DIN

கடலூரில் வெள்ள பாதிப்புகளைக் கண்காணிக்கும் அமைச்சா்கள் குழுவில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் இடம்பெற்றுள்ளாா். இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

அதன் விவரம்: புரெவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையைத் தொடா்ந்து பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சா்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அமைச்சா்கள் பி.தங்கமணி, எம்.சி.சம்பத் ஆகியோா் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிக பாதிப்பு இருப்பதால், மீட்பு, நிவாரணப் பணிகளில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகமும் இணைந்து ஈடுபடுவாா் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT