முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் பெரும்பாலான கடைகள் அடைப்பு

மத்திய அரசு  கொண்டு வந்துள்ள விவசாய திருத்த சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
ராணிப்பேட்டையில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கின
பகிர்:

மத்திய அரசு  கொண்டு வந்துள்ள விவசாய திருத்த சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஒரு சில கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →