தங்கம் விலை சவரனுக்கு ரூ. 766 உயர்வு!
சென்னையில் செவ்வாய்க்கிழமை 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.766 உயர்ந்து ரூ.37,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.766 உயர்ந்து ரூ.37,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து, ரூ.37,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.97 உயர்ந்து ரூ.4,733-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.69.50-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.69,50- க்கும் விற்பனை ஆகிறது.
செவ்வாய்கிழமை விலை நிலவரம் (விலை ரூபாயில்)
1 கிராம் தங்கம்............................. 4,733
1 சவரன் தங்கம்...............................37,864
1 கிராம் வெள்ளி.............................69.50
1 கிலோ வெள்ளி.............................69,500
திங்கள்கிழமை விலை நிலவரம்(விலை ரூபாயில்)
1 கிராம் தங்கம்............................. 4,636
1 சவரன் தங்கம்...............................37,088
1 கிராம் வெள்ளி.............................66.50
1 கிலோ வெள்ளி.............................66,500