முகப்பு
கடலூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் முதல்வர்
தமிழ்நாடு

கடலூரில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் நேரில் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிப்பு குறித்தும், அனுக்கம்பட்டில் தண்ணீர் தேங்கி நிற்கும் வயலில் இறங்கிப் பயிர் சேதத்தையும் பார்வையிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கடலூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் முதல்வர்
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிப்பு குறித்தும், அனுக்கம்பட்டில் தண்ணீர் தேங்கி நிற்கும் வயலில் இறங்கிப் பயிர் சேதத்தையும் பார்வையிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி. 

புரெவி புயலினால் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பினை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மதியம்  கடலூர் மாவட்டம் வருகை தந்தார். 

அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட அனுகம்பட்டில் வயலில் தேங்கியுள்ள மழைநீரில் இறங்கிப் பார்வையிட்டார். 

பின்னர்,  ஆலப்பாக்கம்  பகுதிகளில் மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்கள் மற்றும் நெடுஞ்சாலைகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து வீராணம் வெள்ளியங்கால் பகுதி, குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநாரையூர் கிராமம், சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட  இளமையாக்கினார் கோயில் தெருவில் சேதமடைந்த பகுதிகள், சாலியன் தோப்பு கிராமத்தில் மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வல்லம்படுகை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். 

முழு கட்டுரையைப் படிக்க →