சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி இணைந்து வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சராகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய எஸ்.ஆர். ராதா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தோம்.
எஸ்.ஆர். ராதா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிராத்திக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.