முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சையில் 3,252 பேர்

சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 3,252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
சென்னையில் கரோனா சிகிச்சையில் 3,252 பேர்
பகிர்:

சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 3,252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொடர்ந்து பல வாரங்களாக கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகவே நீடித்து வந்த நிலையில் தற்போது 1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 

சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2,18,198 ஆக உள்ளது. இவர்களில் 2,11,061 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,885 பேர் பலியாகியுள்ளனர். இது 1.78 சதவீதமாகும். 

இவர்களில் 3,252 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1% ஆகும். மேலும் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் 400-க்கும் குறைவானோரே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரோனா பாதித்தவர்களில் 61.43 சதவீதம் பேர் ஆண்கள், 38.57 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

திருவிகநகர், அண்ணநகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் மட்டுமே 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →