திருவான்மியூர் ஐடிஐ-யில் டிச.12 வரை நேரடி மாணவ சேர்க்கை 
தமிழ்நாடு

திருவான்மியூர் ஐடிஐ-யில் டிச.12 வரை நேரடி மாணவ சேர்க்கை

திருவான்மியூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) டிசம்பர் 12-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: திருவான்மியூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) டிசம்பர் 12-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டிற்கான அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் திருவான்மியூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கிண்டி (மகளிர்) வளாகம் எலக்ட்ரானிக் மெக்கானிக், டெக்னீஷியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய தொழிற்பிரிவுகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் 12.12.2020ஆம் தேதிக்குள் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பயிற்சியில் சேரலாம். 

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி மற்றும் அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750/-, மடிக்கணிணி, மிதிவண்டி, பேருந்து பயணச் சலுகை, பாடப்புத்தகம், சீருடை மற்றும் வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 
பயிற்சி முடிவில் மத்திய, மாநில அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண். 044 - 22504990-ஐ அணுகலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர். சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய ஜூனியா் ஹாக்கி அணி சென்னை வருகை

தேச ஒற்றுமை விழிப்புணா்வு சைக்கிள் பயணக் குழு கரூா் வருகை!

மாணவா்களிடையே நூலகப் பயன்பாட்டை ஏற்படுத்துதல் அவசியம்!

லாரி மோதி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

பட்டாசு ஆலைக்குள் மயங்கி விழுந்தவா் பலி! இழப்பீடு கோரி உறவினா்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT