வேலூர் அருகே சிறை வார்டன் உள்பட 3 பேர் அடுத்தடுத்து கொலை
வேலூர் அருகே புழல் சிறை வார்டன் உள்பட 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பாக 7 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்: வேலூர் அருகே புழல் சிறை வார்டன் உள்பட 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பாக 7 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், அரியூர் அருகே ஊசூர் செவிலியர் கல்லூரி எதிரே காமேஷ்(26) என்பவர் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு ஒரு கும்பலால் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதன்தொடர்ச்சியாக, அவரது நண்பர்களான புழல் சிறை வார்டன் தணிகைவேல்(26), திவாகர்(25) ஆகியோர் ஊசூர் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டனர்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த ரௌடி அசோக் என்பவர் அரியூர் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்கு பழி வாங்கும் நோக்கத்தில் இந்த 3 பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸôர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ரௌடி அசோக் கூட்டாளிகளான ராஜா என்கிற எம்எல்ஏ ராஜா உள்பட 6 பேரை பிடித்து அரியூர் காவல்நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாள் இரவில் 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.