தமிழ்நாடு

மேட்டூர்: வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம்

DIN

சேலம் மாவட்டம் மேட்டூரில் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், உடனடியாக விவசாயிகளை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சார்பில் மேட்டூர் ஸ்டேட் பேங்க் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. 

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் பழ.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய-மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திடீரென பிரதமரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதனால் அணைக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று பேருந்தில் ஏறினார்கள். ஒருவர் பேருந்து சக்கரத்துக்கு அடியில் படுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். 

போலீசாரின் தடுப்பை மீறி சிலர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேட்டூர் கிளை நுழைவாயில் முன்பு அமர்ந்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. முன்னதாக மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து போராட்டக்காரர்கள் ஊர்வலமாக வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT