முகப்பு
தமிழ்நாடு

பச்சையப்பன் அறக்கட்டளையை தமிழக அரசு ஏற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரி மனு

பச்சையப்பன் அறக்கட்டளையை  தமிழக அரசு ஏற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளையை  தமிழக அரசு ஏற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கந்தசாமி கல்லூரியின் உதவி பேராசிரியர் முருகன் தாக்கல் செய்த மனுவில், சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் 234 உதவி பேராசிரியர்கள் முந்தைய நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அறக்கட்டளை மீது புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் நியமிக்கபட்டார். அவர், இந்த நியமனங்கள் தொடர்பாக ஆய்வு செய்தபோது 105 உதவி பேராசிரியர்கள்  சட்டவிரோதமாக நியமிக்கபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து 105 உதவி பேராசிரியர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்,பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தை அரசே ஏற்று ஏன் நடத்தக்கூடாது என தமிழக அரசு, அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தவறானது. எனவே பச்சையப்பன் அறக்கட்டளையை  தமிழக அரசு ஏற்கும் நடைமுறைகளுக்கு  தடை விதிக்க வேண்டும். பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட 105 உதவி பேராசியர்களை மீண்டும் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பச்சையப்பன் அறக்கட்டளை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →