திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி: புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை வகித்தார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மனு ஸ்ருதி கொள்கையை அமல்படுத்த முயல்வதை கைவிடவேண்டும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பாரபட்சமின்றி அனைத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.