முகப்பு
தமிழ்நாடு

வருமானவரி வழக்கு: கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
வருமானவரி வழக்கு: கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு
பகிர்:

வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முடிக்கும் முன்னரே வழக்குப் பதிவு செய்தது செல்லாது எனறு கூறி, வழக்கிலிருந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை விடுவித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

தங்களது வருமானத்தில் ரூ.7.37கோடியை கணக்கில் காட்டவில்லை என கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது கடந்த 2018-ல் வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. 

சென்னைக்கு அருகே தங்களுக்கு சொந்தமான சொத்தை 2015-ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை குறைத்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாக, கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகள் முடியும் முன்னரே வழக்குத் தொடர்ந்தது செல்லாது என்று கூறி, வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →