மருத்துவக் கலந்தாய்வில் போலிச் சான்றிதழ்: மாணவி, தந்தை மீது வழக்குப்பதிவு
மருத்துவக் கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்த மாணவி, மற்றும் அவரது தந்தை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மருத்துவக் கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்த மாணவி, மற்றும் அவரது தந்தை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி நடந்து முடிந்த மருத்துக் கலந்தாய்வில் கலந்துகொண்டார். அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக சான்றிதழ் அளித்திருந்தார்.
ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பில் அவரது கலந்தாய்வு அழைப்புக் கடிதம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை சோதனை செய்ததில் அவர் போலிச் சான்றிதழ் அளித்தது தெரியவந்தது.
நீட் தேர்வில் அவர் 27 மதிப்பெண்கள் மட்டுமே போட்டிருந்தார். அவரது தந்தை பாலச்சந்திரன், பல் மருத்துவராக இருக்கிறார்.
இதையடுத்து அதிகாரிகள் காவல்துறையில் புகார் கொடுக்கவே, பெரியமேடு காவல்துறையினர் மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.