முகப்பு
தமிழ்நாடு

ரஜினிகாந்த் பிறந்தநாள்: ஊத்தங்கரையில் நல உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

ஊத்தங்கரையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
ரஜினிகாந்த் பிறந்தநாள்: ஊத்தங்கரையில் நல உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்ற பேரூர் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜினி சங்கர், ஒன்றிய இணைச் செயலாளர் குணசேகரன், நகர வர்த்தகர் அணிச் செயலாளர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன் கலந்துகொண்டார். பின்னர் கேக் வெட்டி, இலவச வேட்டி சேலை, உணவு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணைச் செயலாளர் பாபா மாதையன், மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →