தமிழகத்தில் நடந்த வேல் யாத்திரை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எச்.ராஜா, வி.பி.துரைசாமி, சுதாகர் ரெட்டி, அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய எல்.முருகன், தமிழகத்தில் நடத்தப்பட்ட வேல் யாத்திரை தடையையும் மீறி பொது மக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார். பாஜக பலவீனமாக உள்ள மாவட்டங்களிலும் வேல் யாத்திரை நடத்தி முடிக்கப்பட்டதால் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரக்கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் முன்னிறுத்தப்படும் வேட்பாளரை முதலமைச்சராக வேண்டும் என்றும் எல்.முருகன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.