2021 டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு
2021-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
2021-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் - 1 தேர்வு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வர்த்தக உதவி இயக்குநர் பணிக்கான தேர்வு ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும்,
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் (ரசாயனப் பிரிவு) உதவி கண்காணிப்பாளர் பணிக்கு ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2A, தேர்வுக்கான அறிவிக்கை மே மாதமும், குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிக்கை செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.