முகப்பு
தமிழ்நாடு

5 நாள் பயணமாக முதல்வர் பழனிசாமி சேலம் வருகை: அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு 

ஐந்து நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் வந்தார். சேலம் விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
சேலம் விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்த அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள்.
பகிர்:

சேலம்: ஐந்து நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் வந்தார். சேலம் விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் வந்த விமானம் வானிலை காரணமாக அரை மணிநேரம் தாமதமாக வந்தது.
 
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பயணிகள் விமானம் வாயிலாக புதன்கிழமை காலை சேலம் விமான நிலையம் வந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் ராமன், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெங்கடாசலம், வெற்றிவேல் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
 
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக் திறப்பு, வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் பழனிசாமி, சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம், ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தில் இருக்கும் சேலம் விமான நிலையத்திற்கு புதன்கிழமை காலை 8.45 மணிக்கு வந்தார். வழக்கமாக 8.15 மணிக்கு விமானம் வானிலை காரணமாக புதன்கிழமை 8.45 மணிக்கு அரை மணி நேரம் வந்தது. அவருக்கு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெங்கடாசலம், எஸ்.வெற்றிவேல் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இதேபோன்று, நூற்றுக்கணக்கில் கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, பின்னர் கார் வாயிலாக சேலம் மாநகரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். புதன்கிழமை முதல் வரும் 20-ஆம் தேதி வரை சேலத்தில் தங்கியிருக்கும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பின்னர், 20-ஆம் தேதி காலை பயணிகள் விமானம் மூலம், மீண்டும் சென்னை திரும்பிச் செல்கிறார்.
 
கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, தற்போது தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து சேலத்திற்கு கார் வாயிலாகவும், கோவைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்த கார் வாயிலாக முதல்வர் சேலம் வந்துள்ளார். கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு, முதல்முறையாக சேலத்திற்கு விமானம் வாயிலாக முதல்வர் புதன்கிழமை காலை வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →