கல்லூரிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை: மாநகராட்சி
சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலுக்கு மத்தியில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின்படி அனைத்து விதமான கல்லூரிகளும் கடந்த 7-ஆம் தேதி திறக்கப்பட்டன.
கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னை ஐ.ஐ.டி.யில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.