முகப்பு
மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் போராட்டம்
தமிழ்நாடு

உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கேட்டு மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் போராட்டம்

உருளைக்கிழங்குகளை விவசாயிகள் சந்தை படுத்துவதற்காக உரிய விலை கேட்டு மேட்டுப்பாளையத்தில் நடைபெற இருந்த ஏலத்தை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு

உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கேட்டு மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் போராட்டம்

உருளைக்கிழங்குகளை விவசாயிகள் சந்தை படுத்துவதற்காக உரிய விலை கேட்டு மேட்டுப்பாளையத்தில் நடைபெற இருந்த ஏலத்தை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் போராட்டம்
பகிர்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்குகளை விவசாயிகள் சந்தை படுத்துவதற்காக உரிய விலை கேட்டு மேட்டுப்பாளையத்தில் நடைபெற இருந்த ஏலத்தை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கூட்டுறவு விற்பனை சங்கம் ஆனது செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் பயிரிடக்கூடிய உருளைக்கிழங்குகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு இந்த கூட்டுறவுச் சங்கத்தில் இருப்பு வைத்து ஏலம் விடப்பட்டு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். வழக்கம் போல் உருளைக்கிழங்கு விவசாயிகள் 240 டன் உருளைக்கிழங்குகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். 

புதன்கிழமை  வழக்கமாக ஏலம் துவங்கிய நிலையில் 45 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்றின் விலை ரூ.900 என ஏல தொகையானது கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் கூறப்பட்டது. பின்னர் அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.1,500  மட்டுமே உருளைகள் கிழங்கானது ஏலம் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இதே கூட்டுறவுச் சங்கத்தில் விதைக்கிழங்கு 45 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்றின் விலை ரூ.2,400க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள் தங்களது உழைப்பைப் போட்டுப் பாடுபட்டு அதனை உற்பத்தி செய்து வந்தால் அதே கூட்டுறவுச் சங்கம் ரூ.1,500க்கு  ஏலத்தில் விடுவது வேதனை அளிக்கிறது என விவசாயிகள் குற்றம்சாட்டினர். 

இதையடுத்து விவசாயிகள் குறைந்த விலைக்கு உருளைக்கிழங்கை விற்க முடியாது எனக் கூறி ஏலத்தை நிறுத்தினர். மேலும் கூட்டுறவுச் சங்கத்தின் முன்பு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகையிட்டனர். ஏலத்தில் முதல் தொகையாக  ரூ.1,500 நிர்ணயம் செய்து ஏலம் விட வேண்டும். அத்துடன் ஏலம் விடப்படும் போது விவசாயிகளுக்கு ஏல விலை கட்டுபடியானது எனக் கேட்டு விட்டு அதனை விற்பனை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதன்கிழமை நடைபெ

முழு கட்டுரையைப் படிக்க →