தமிழ்நாடு

மத்தூர் அருகே தீவிபத்தில் மூதாட்டி உடல் கருகி சாவு

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கோவிந்தம்மாள் (80),உடல் கருகி உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள பெருகோபனபள்ளி கிராமத்தில் மாரி(எ) கோவிந்தம்மாள்(80), வசித்து வந்தார்.

கணவனை இழந்த அவர் அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், மூதாட்டி வசித்து வந்த வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதை அணைக்க முயன்றனர். தகவலறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர், உள்புறமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டிஉடல் கருகி உயிரிழந்திருந்தார்.

இந்த தீ விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மூதாட்டி தன் படுக்கையின் அருகே வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்ததில் தீ பரவி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இங்கிலாந்து!

காதல் கதையில் மம்மூட்டி!

இன்சுலின் என்ற பெயரில் ஹோமியோபதி மருந்தா?

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா வெற்றியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து

கொலைகார முதலையைக் கொன்று விருந்து!

SCROLL FOR NEXT