புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் 10% இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடுபுதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் 10% இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை: புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்து துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது.
அமைச்சரவையின் முடிவை, துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார். கடந்த 2016 -2017 ஆம் ஆண்டிலிருந்து அரசு பள்ளியில் படித்த 16 முதல் 22 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் தனியார் பள்ளியில் படித்த மாணர்வர்கள் 243 பேர் முதல் 402 பேர் வரை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை புதுச்சேரியில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவையின் முடிவு குறித்து சில விளக்கங்களைக் கேட்டு புதுச்சேரி அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக துணை நிலை ஆளுநர் நேற்று வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டினார்.
மேலும், மனு தொடர்பாக வரும் டிசம்பர் 21 ஆம் தேதிக்குள் மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.