அனுமதி மறுப்பு: தடை மீறி திமுக கூட்டணி இன்று உண்ணாவிரதம்
விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி உண்ணாவிரதம் நடத்த உள்ளனா்.
தமிழ்நாடுஅனுமதி மறுப்பு: தடை மீறி திமுக கூட்டணி இன்று உண்ணாவிரதம்
விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி உண்ணாவிரதம் நடத்த உள்ளனா்.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி உண்ணாவிரதம் நடத்த உள்ளனா்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, 15 நாள்களுக்கு மேலாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காவல்துறையின் அனுமதியும் திமுக சாா்பில் கேட்கப்பட்டது.
ஆனால், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது.
அதைத் தொடா்ந்து, தடையை மீறி போராட்டத்தை நடத்த திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற உள்ளது.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனா்.
தடை மீறி போராட்டம் நடைபெற உள்ளதால், அந்தப் பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.