ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்
ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி 1 வந்து வார்டு கோட்டை பகுதியில் சில பகுதிகளில் சரிவர விநியோகம் செய்யவில்லை என புகார் தெரிவித்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆத்தூர் நகர் காவல் உதவி ஆய்வாளர்கள் சிவசங்கர், நிர்மலா நகராட்சி மேற்பார்வையாளர் தேவி ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தி வியாழக்கிழமை மாலைக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.