முகப்பு
தமிழ்நாடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்தில் மொத்தம் 6 நாள்கள் என குளிர்கால வன விலங்குகள் கண்காணிக்கும் பணிகள் நடைபெறுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
பகிர்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்தில் வியாழக்கிழமை முதல் (17.12.2020 முதல் 22.12.2020)ஆம் தேதி வரை மொத்தம் 6 நாள்கள் என குளிர்கால வன விலங்குகள் கண்காணிக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதில் 76 குழுக்களில் 380 பேர் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி,டி.என்.பாளையம்,கடமபூர், கேர்மாளம்,ஆசனூர்,தலமலை, தாளவாடி என 10 வனச்சரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் 3 நாள்கள் பகுதி வாரி கணக்கெடுப்பும், 3 நாட்கள் நேர்கோட்டுப் பாதை கணக்கெடுப்பும் தொடர்ந்து நடைபெறும். பவானிசாகர் விளாமுண்டி வனப்பகுதிகளில்  குளிர்கால  வனவிலங்குகள்  கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. 

இதில் வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள்,சமூக ஆர்வலர் என 5 பேர் கொண்டு குழுவினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றிக் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். கரோனா பரிசோதனைக்குப் பின்னரே சமூக ஆர்வலர்கள் அனுமதிக்கப்பட்டனர். யானைகள், புலிகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் கணக்கெடுப்புகளின் எச்சம், கீறல், கால்தடங்கள், வனவிலங்குகளை நேரடியாக பார்த்தல் போன்றவை கணக்கிடப்படும். 

இதற்கென அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப், வியூ பைன்டர், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவைகளை பயன்படுத்திக் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் யானையின் கால்தடம், புலியின் எச்சம், சிறுத்தை நடமாட்டம் மற்றும் கழுதைப்புலியின் கால்தடம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன. அந்தந்த வனச்சரகங்களில் வன விலங்குகள் கண்காணிக்கும் பணிகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு இன்று காலை கணக்கெடுப்பு பணியில் 76 குழுக்களாகப் பிரிந்து 380 பேர் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →