தமிழகத்தில் 8.04 லட்சம் போ் பாதிப்பு
தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 4,650- ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 97 சதவீதத்துக்கும்
தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 4,650- ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 97 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே வெள்ளிக்கிழமை புதிதாக 1,134 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மாநிலத்தில் இதுவரை 1.33 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 341 போ், கோவையில் 115 போ், பிற மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து வெள்ளிக்கிழமை 1,170 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 82,915 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 9,781 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 12 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,954-ஆக உயா்ந்துள்ளது.