முகப்பு
வேளாண் சட்ட திருத்தங்களைத் திரும்பப்பெறக்கோரி தாராபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
தமிழ்நாடு

தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்ட திருத்தங்களைத் திரும்பப்பெறக்கோரி தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
வேளாண் சட்ட திருத்தங்களைத் திரும்பப்பெறக்கோரி தாராபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
பகிர்:

திருப்பூர்: வேளாண் சட்ட திருத்தங்களைத் திரும்பப்பெறக்கோரி தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

தாராபுரம் அண்ணாசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் நா.தமிழ்முத்து தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: தில்லியில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக கடுமையான குளிரையும் பொருள்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஆதரித்தும், விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், தாராபுரம் நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் தனபால்,. காங்கயம் நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →