முகப்பு
அருப்புக்கோட்டையில வியாழன் நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கும் விடாது பெய்த மழை.
தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் விடிய விடிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை விடிவிடிய மிதமான மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
அருப்புக்கோட்டையில வியாழன் நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கும் விடாது பெய்த மழை.
பகிர்:

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை விடிவிடிய மிதமான மழை பெய்தது. இத்தொடர் மழையால் பொதுமக்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டதுடன், வணிகமும் பாதிக்கப்பட்டதாக காய்கறி, பூச்சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை இரவு சுமார் 11.30 முதல் மறுநாளான வெள்ளிக்கிழமை காலைவரை விடிய விடிய மிதமான மழை இடைவெளியின்றிப் பெய்த வண்ணம் இருந்தது. இதனால் அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் நீர் நிரம்பி மறுகால் பாய்ந்தது. நீர்வெளியேறும் மதகுப்பகுதியில் ஆகாயத்தாமரைகள் மொத்தமாக அடைத்துக்கொண்டதால்,அம்மதகுப்பகுதியில் அடைப்பை நீக்கிய பிறகே நீர் சீராக வெளியேறி மறுகால் பாய்ந்தது. 

தொடர்மழை காரணமாக மக்களின் அன்றாடப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் பாதிப்படைந்தன. காய்கறி, பூச்சந்தைகளில் வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததால் அன்றாட வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →