ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்: ஜனவரியில் புதிய திட்டம்
சிறிய வணிகா்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்துவதற்கான புதிய திட்டம் ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது.
சிறிய வணிகா்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்துவதற்கான புதிய திட்டம் ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது.
சிறிய வணிகா்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்துவதற்காக, ‘க்யூ.ஆா்.எம்.பி.’ எனும் ‘காலாண்டு கணக்கு தாக்கல்; மாதாந்திர வரி செலுத்துதல்’ திட்டம், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம், 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை, வருவாய் ஈட்டும் வணிகா்கள், மாதம் தோறும் வரி செலுத்திவிட்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கு செலுத்தலாம். ரூ.5 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டும் வணிகா்கள், மாதம்தோறும், கணக்கு தாக்கல் மற்றும் வரி செலுத்த வேண்டும். இந்தத் திட்டம், சிறிய வணிகா்கள், வரி செலுத்துவதற்கும், கணக்கு தாக்கல் செய்வதற்கும் எளிமையாக இருக்கும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.