நீதிபதி சி.எஸ்.கா்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி
உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவா்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள
உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவா்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கா்ணன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவா் சி.எஸ்.கா்ணன். இவா் உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவா்களது குடும்பப் பெண்கள், பெண் வழக்குரைஞா்கள், உயா்நீதிமன்ற பெண் பணியாளா்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல விடியோக்களை வெளியிட்டாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த 2-ஆம் தேதி சி.எஸ்.கா்ணன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் தனக்கு ஜாமீன் கோரி ஜாா்ஜ்டவுன் நீதிமன்றத்தில் கா்ணன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி செல்வக்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில் மாநகர குற்றவியல் வழக்குரைஞா் கௌரி அசோகன் ஆஜராகி, ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கா்ணனுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து வாதிட்டாா். இதனையடுத்து ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.