கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘அசுரன்’ மற்றும் ‘தேன்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.
51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு பெரிய திரையில் திரையிடப்படும். இவற்றில் முதல் படமாக துஷார் ஹிராநந்தினி இயக்கிய சாந்த் கீ ஆங்க் என்னும் இந்தி திரைப்படம் இருக்கும்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ள தேன் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.