தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு எப்போது?- இன்று மாலை ஆலோசனை கூட்டம்! 

DIN


சென்னை: தமிழகத்தில் தேரதல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர்  ஈபிஎஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 

இந்த ஆலோசனையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் பொதுக்குழு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம், தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT