முகப்பு
தமிழ்நாடு

ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா
பகிர்:

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம்  முகில்வண்ணம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள மிகப் பழமையான ஸ்ரீ சடைஉடையார் சாஸ்தா கோயிலில் சடைஉடையார் சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில் 19 ஆவது ஆண்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது. மூலவர் சடை உடையார் சாஸ்தா, பூர்ணா, புன்னைவனத்தாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மூன்று நாட்களாக நடைபெற்றது. 

முதல் நாள் நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், கரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடவும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் கீர்த்தனைகள் பாடி சாமி தரிசனம் செய்தனர். 

இரண்டாம் நாள் ஐயப்ப பக்தர்களின் கன்னி  பூஜையும், மூன்றாம் நாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும்  சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டை சடைஉடையார் திருக்கோவில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.