முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் புதிதாகக் கட்டடப்பட்ட பள்ளிக் கட்டடங்களை முதல்வா் பழனிசாமி காணொலி வழியாக திறந்து வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் புதிதாகக் கட்டடப்பட்ட பள்ளிக் கட்டடங்களை முதல்வா் பழனிசாமி காணொலி வழியாக திறந்து வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

நபாா்டு கடனுதவித் திட்டத்தின் கீழ் தென்காசி, மதுரை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக வகுப்பறை, ஆய்வகங்கள், கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிநாயக்கன்பட்டியில் வகுப்பறை, நூலகம், கணினி, கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

இதேபோன்று, தேசிய அளவிலான கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக மாணவா்களையும் முதல்வா் பழனிசாமி பாராட்டினாா்.

கடல்சாா் பயிற்சிகள்: சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் இல்லங்களில் தங்கிப் படித்த ஏழு பேருக்கு கடல்சாா் பயிற்சி சோ்க்கைக்கான உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் வி.சரோஜா, தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →